சூரியத்தி ! சூரியத்தி !
வெயிலால நெஞ்ச நக்கி,
மாமன் ஒடம்ப நீயும் வெளுக்காத…
பாசத்துல சுட்டு நீயும் எரிக்காத…
சூரியத்தி ! சூரியத்தி !
செடிங்கல பச்சை குத்தி,
நெல்லு விதை விதைச்சு வச்சா…
நாளாவது நாள்ல நாத்து, புடிக்குமா…
சூரியத்தி ! சூரியத்தி !
ஒளியில மருந்து ஆத்தி,
வந்து புட்டா உன் சக்காலத்தி,
இப்ப ஆகசத்துல கோட்டை கட்டி!
சூரியத்தி ! சூரியத்தி !
ஊருக்குள்ள உன்னை பத்தி !
மேகத்தை தான் இப்ப கிழிப்பியோ !
காத்த கூட்டி நீ களிப்பியோ !
சூரியத்தி ! சூரியத்தி !
மின்சாரத்தை சேமிக்க மின்கலத்தி,
இரு ஒரு நாள் மட்டும்,
இந்த இரண்டொரு நாள் மட்டும்,
இருப்பியா ?
எங்க நெல்ல நீயே வந்து
வளர்ப்பியா..
காத்து இருப்பியா…
காப்பியா…
எங்கள காத்து இருக்கும்மய்யா !
கருத்துகள்
கருத்துரையிடுக