உள்ளத்தில் உள்ளபடி

முகக்கவசம் போட சொல்றது...
உன் உசுற காப்பாத்த மட்டும் இல்லை!
உன் உயிரு போச்சுன்னா,
உன் குடும்பத்த பாதிக்கும்...
உன் கூட வேலை செய்றவங்கள பாதிக்கும்...
உன் கூட பொறந்தவங்கள பாதிக்கும்...
ஆனா !
இப்ப இருக்க சூழல்ல,
நீ முகக்கவசம் போடாம போனா ?
அது நீ போற எல்லா எடத்துலையும் இருக்க எல்லாரையும் பாதிக்கும்.
ஒரு ஊரையே அழிக்க கூட வாய்ப்பிருக்கு நீ தெரு தெருவா போய் விற்க்குற வியாபாரியா இருந்தா...
உன் ஊட்டுக்கு இல்ல,
இந்த ஊருக்கு நல்லது செய்ய
வெளிய வரும் போது முடிஞ்சா ஒன்னுக்கு ரெண்டு முகக்கவசத்தை போட்டு வா.
இல்லியா வெளிய வர்ரதை குறைச்சிக்க...
என்னை கேட்டா
தவிர்த்திடச் சொல்வேன்.

கருத்துகள்