பா

தெனமும் வோடுரோம் வோடுரோம் வோடுறோம்
வாழ்க்கை ! பாதை ! இல்லாமலே !
தெனமும் வோடுரோம் வோடுரோம் வோடுறோம் 
வாழ்க்கை ! பாதை ! இல்லாமலே !
கெடந்து ஓடுரோம் ஓடுரோம் 
நாமும் பணம் இல்லாமலே
வாழ்க்கை பொழப்புக்கு 
தேடுறோம் தேடுறோம் 
வேலை தேடுறோம்
வாழ வழியில்லாமலே
காசு பணத்த சேர்க்க ஓடுறோம்
கால் வலியும் தாங்கி ஓடுறோம்
உசுற பணையம் வச்சு ஓடுறோம்
நாரு நாரா நாமும் ஓடுறோம்
ஆனா,
எங்கே போய்யி நாமும் சேருறோம்
தேசம் கடந்து பணத்துக்கு ஓடுறோம்
உடம்பு சரியில்லை ஆனா ஓடுறோம்
உயிர உருக்கி நாளும் ஓடுறோம்
தாளு தாளா அந்தும் ஓடுறோம்
ஆனா,
எங்கே போய்யி நாமும் சேருறோம்
வாழ்ந்த வாழ்வில் தேடிப்பார்த்தா,
ஒரு கைபிடி அளவும் சேர்க்கலையே
சோகம் மறந்து தூங்க பார்த்தா 
சொர்க்கம் ஒன்னும் அழைக்கலியே
எதையும் கரைக்க கடல் ஒன்னு இருக்கு 
கனவு கரைக்க கடலில்லையே
எதையும் எரிக்க நெருப்பு இருக்கு 
நான் யென் கனவ எரிக்க முடியலியே
ஓடுறோம் நாமும் ஓடுறோம்
ஓட்டம் என்றும் முடியலையே
நின்று தேடுவோம், நிறுத்தி ஓடுவோம் 
என்று யோசிக்க மனசில்லையே
தெனமும் வோடுரோம் வோடுரோம் வோடுறோம்
வாழ்க்கை ! பாதை ! இல்லாமலே !
தெனமும் வோடுரோம் வோடுரோம் வோடுறோம் 
வாழ்க்கை ! பாதை ! இல்லாமலே !
கெடந்து ஓடுரோம் ஓடுரோம் 
நாமும் பணம் இல்லாமலே








கருத்துகள்