நேர் கொழுசில் ஏத்தி விட்ட
தங்கச்சி ஏன் ரத்தினமே !
கால் கொழுசை ராட்டினமா
சுத்திவிடும் ரத்தினமே !
யென் தங்கச்சி நீ முத்தழகே…
பேசும் பேச்சில் நீ முத்தமிழே !
செந்தமிழே ! தங்கரதமே !
யென் தங்கச்சி மனமே…
சின்ன சின்ன செப்பு கல்லு
யென் தங்கச்சி நீ சொல்லு சொல்லு
எட்ட நிக்கும் மலையக் கேளு
இல்லை என்ன வேணும் கேளு கேளு ? ?
தங்கமணி வெள்ளிமணி
யென் தங்கச்சி நீ கண்ணுமணி…
அண்ணங்காரன் நான் இருக்கேன்
தங்கமே நீ பொருளக் கேளு…
கேட்கும் வரம் உனக்கிருக்க
கொடுக்கும் வரம் வேண்டி நிப்பேன்
என்ன வேணும் கேளு கேளு
எப்படியும் செஞ்சி தர நானிருக்கேன்
கருத்துகள்
கருத்துரையிடுக