ஓடலாம்

இனிய சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை நல்வாழ்த்துகள். 🙂


இறக்கம் இல்லாமல் ஏற்றம்

கிடையாது !

வலிகள் இல்லாமல் வாழ்க்கை

சிரிக்காது !

வா நீ,

ஓடி வா !

ஓடோடி வா !

நடைகள் இல்லாமல் வழிகள்

பிறக்காது !

உழைப்பொன் றில்லாமல் உயர்வது

நடக்காது !

வா நீ ,

ஓடி வா !

ஓடோடி வா !

தடையது இல்லாமல் வெற்றி

நிலைக்காது !

விடியல் இல்லாத காலை

பொழுதேது !

வா நீ,

ஓடி வா !

ஓடோடி வா !



வெற்றி என்றும் நம் பக்கம்.

வா நாமும் ஓடலாம்.

வெற்றிப் படி ஏறலாம்.

இனி நம் பாதை,

வெற்றி பாதையில் செல்ல,

ஓடோடலாம்.

வெற்றிப் பாதையில் இனி நாமும் சேரலாம்…

வா போவோம் வா !


#கரோனா #வீட்டிலிரு #தனித்திரு #அரசாங்கத்துக்குஒத்துழைப்போம்

கருத்துகள்