உயிரித் தேடல்

இசையை எடுத்து இறைக்கு படைத்து
அசைவ உணவாய் எழுத்தை எடுத்து
வெட்டி எடுத்த வரியை கொடுத்து
அமைத்து எடுத்த பாடல் - இது
இசைக்கும் எழுத்துக்கும் உண்டான மோதல்...
உணவை உண்டு ஏப்பம் கொடுக்க
மக்கள் அதனை கேட்டு மகிழ
படைத்த உணவு செமித்து செழிக்க
அமைத்து எடுத்த பாடல் இது
மண் மொழிக்கு விடுத்த தேடல்
உணவு உண்டு மகிழ்ந்து நெகிழ
உண்ட உணவால் உரக்கம் அழைக்க
உண்மை உடைத்து உவமை உயர
அமைத்து எடுத்த பாடல் இது
படைப்பு மீதான உயிரியல் தேடல்...
இறை - மழை
இசை - மோகமாகவும்
எழுத்து - காற்றாகவும்
ஏப்பம் -இடி
வரி - மழை திவலை
உரக்கம் - நீர் நனைத்த சகதி
உவமை உயர - செடி

கருத்துகள்