எழுத்துக்கு,
உயிர் கொடு
உயிர்த்த பின்
வடிவம் கொடு
வடித்த பின்
பெற்று எடு
பெற்ற பின்
வளர விடு
அடித்து திருத்து
அறிவை கொடு
உயர விடு
அத்தனையும் கொடு
பக்குவப் படுத்து
மக்களுக்கு கொடு
தீர்ப்பு அது
கருத்துக்களை எடு
சிலரது பலரது
பகுத்து எடு
பகுத்த பின்
முதிர்ச்சி பெறு
முற்றும் அது...
கருத்துகள்
கருத்துரையிடுக