ஆணுக்கு தான் தெரியவில்லை
பெண் படும் துயரம்,
இந்த பேனுக்குமா தெரியவில்லை !
ஐந்தில் ஒரு விரலை
காதோரக் கூந்தலில் பெருக்கி,
ஈர் தாண்டி பேன்,
பேணி காத்த பேன்
பிடிபட்ட பின் மறுவிரலான
கட்டை விரல் சேர்த்து
எடுத்து,
மறுகையின் கட்டை விரல்
நிகத்திலிட்டு,
பேன் பிடித்த கட்டை
விரலாலே கொடுப்பாரே ஒரு
கொட்டு, நசுங்கிய பின்
ஆண் பாவமோ ?
பெண் பாவமோ ?
பேன் பாவம் !
அகப்படும் பேனின்
மொத்த உசுரும் அடங்கியதும்
சற்று தலை நிமிர்த்தி
சுற்றத்தில் தூர, கிட்ட
என ஒரு பார்வை
ஒரே பார்வை !
யாரும் பார்க்கவில்லை எனில்,
மறுபிடி ஒரு கொட்டு.
அகப்பட்டு விட்டால்,
ஒரு சிறு அதிர்ச்சி,
பின் அலட்டிக் கொள்ளாமல்
ஒரு நொடி நடை,
இரண்டு நபர் தள்ளி
மறுபிடியும் ஒரு கொட்டு.
இம்முறை வன்முறை யாரும்
அறியாதவாறு !
பேருந்து வரும் வரை,
பயணம் தொடங்கும் வரை,
காத்திருக்கும் நேரம் வரை,
கொட்டு ! கொட்டு ! கொட்டு !
ஆணுக்கு தான் தெரியவில்லை
பெண் படும் துயரம்,
இந்த பேனுக்கும் தெரியவில்லை !.
கருத்துகள்
கருத்துரையிடுக