கொ(ஒ)லைகாரி

கொலைகாரி....
எது என எண்ணிக் கொன்றாய்,
அக்குழந்தையை!
உன் உயிரில் கலந்த சிசுவை,
எது என எண்ணிக் கொன்றாய்!
பாம்பா இல்லை கரப்பானா
எறும்பா அல்ல வண்டா
அறுவறுத்ததோ!
அறக்கி !
உன்னை பெற்ற தாயும்
உன்னைப் போல் நினைத்திருந்தால்,
கரு கலைத்திருந்தால் !
ஆயிரம் கசப்பு இருப்பினும்,
ஏன் அச்சிசுவை கொன்றாய் ?
கொலைகாரி...
பொறுக்கி...
என்ன பாவம் செய்தது, அப்பிஞ்சு
உன் உயிரில் ஒன்றாய்
உருபெற்றதை தவிர்த்து ?
குழந்தை இல்லா மனிதர்களை கேட்டுப் பார், தெரிந்து கொள்வாய்
தனித்து விடப்பட்ட குழந்தைகளை கேட்டுப்பார், தெரிந்து கொள்வாய்
குழந்தை பெற்றவரை கேட்டுப்பார்
வலியும் சுகமாய் மாறிப்போன தருனம்
அல்லவா அது. குழந்தை பேறு.
பெண் தாயாய் மாறும் ஒரு சுழற்சி,
அதன் பொருட்டே அதை முழுமை என்றும் கூறுவர்...
சுகப்பிரசவம் என்றால் ஒரு பேச்சு,
அறுவை சிகிச்சை செய்து எடுத்தால் ஒரு பேச்சு,
எத்தினை நபர்கள்,
எத்தினை பிராத்தனை,
எத்தினை உயிர்கள்
ஒரு உயிர் பிறக்க போராடும் தெரியுமா !
உனக்கு தெரியுமா ?
கிறுக்கி
ஏன் உன்னை சுற்றி இருக்கும் பெரியோரை  கேட்டுப்பார்...
ச்சீ அவர்கள் உன் பக்கம் இல்லாமலா
இக்காரியம் செய்திருப்பாய்
நல்லது சொல்லும் ஒரு உறவினர் கூட இல்லாமலா இருக்கிறாய்
பயித்தியக்காரி
உயர்ந்த மனிதர்களைக் கேள்,
நல்ல தாயை கேள்,
பெற்றால் தானே தெரியும்,
குழந்தையின் சுவை.
இனி யாரிடம் கேட்டு என்ன பயன் ?
கொன்றுவிட்டாயே ?
அந்த உடலை உடலாக மாறும் முன்னே களைத்து விட்டாயே ?
உயிரை எடுத்து விட்டாயே ?
எங்கே அந்த குழந்தையின் இதயத்துடிப்பு !
எங்கே அந்த குழந்தையின் உருவம்!
எங்கே அந்த உயிர் !
பூமிக்கு வர இருந்த அந்த பிஞ்சு !
யாம் புலம்பி என்ன ஆகப்போகிறது...
எதுவாக இருப்பினும்,
உன் மூத்த (அவளோ/அவனோ) பிள்ளை அச்சிசுவே.
உங்கள் இருவர் சண்டைக்கு அந்த சிசு
என்ன செய்யும் ?
அவசர புத்தி
இல்லை புத்தி இருப்பவர் இவ்வாறு செய்வார்களா...
பணம் இருக்கும் திமிர்,
ஒழுக்கமற்ற வளர்ப்பு,
சுற்றத்தாரின் பேச்சு கேளாமை அல்ல அவர்களின் கெட்ட எண்ணம்,
கேவளமான நண்பர்கள்,
விதைக்க பட்ட படிப்பினை
இப்படி எண்ணற்ற விடைகள்.
ச்சீ... தமிழ் சொல்லும் கச்க்குதடி உன்னால்(உங்களால்),
சீழ் பிடித்த மனம் சீர் ஆக
சில காலம் ஆகலாம்,
ஆனால் கொலை கொலையே.
கொலைகாரக் கூட்டம் கொப்பளமாய்
உடையும் நாள் வரும்.
கோபத்தில் எடுக்கும் ஒவ்வோர் முடிவும்
ஒரு வினை செய்யும்.
உனக்கும் அவ்வாறே வினை புரியும்
தயங்காதே அந்த வினை
கண்டிப்பாக நடக்கும்.
காலம் பதில் சொல்லும்.
காத்திரு !
உன்னை திட்ட வார்த்தைகளுக்கு முடிவே இல்லாமல் நீழுதே...
பாவி...
ஏழு தலைமுறைகள் கடந்தாலும் இந்த பாவ பீடத்தில் தான் நீயும் உன் கணவனும் உங்கள் சுற்றமும்  மிதப்பீர்கள்
இது சத்தியம்.
கொலைகாரி...
கொலைகாரி...

கருத்துகள்