குருவியே

ஏய் குருவியே
என்னை கொஞ்சம்
தூக்கி போனா என்ன
புழுவ கொத்திப் போறியே
என்னை கொத்திப் போனா என்ன
எனக்கும் பறக்கத் தோனாதா
உன்னை பார்த்தாக்கா
ஏய் குருவியே
ஊர் சுற்றும் குருவியே
என்னை தூக்கிப் போனா என்ன
புழு கொத்தி போறியே, விண்னை
உன்னை பார்த்தாக்கா
எனக்கும் பறக்கத் தோனாதா
ஏய் குருவியே
எ ஏய் குருவியே
வீடோ காடோ
ரோடோ மரமோ
எங்கவானாலும் ஒன்னா வாழ்வோமே,
மண்ணா ஆனாலும் ஒன்னா வாழ்வோமே,
அழகே குருவியே
அன்புக் குருவியே
அற்புதம் செய்வாயோ நீ...
என்னை கொஞ்சம் தூக்கிப போனா என்ன
அன்புச் சிறையில்
பறப்போம் வானில்
நீயும் நானும் குருவியே
கொஞ்சம் மருவியே
அழகே குருவியே
அன்பே குருவியே
அற்புதம் செய்வாயோ நீ
என்னை அழைத்துச் செல்வாயோ
இல்லை காலில் பற்றிக் கொல்வாயோ
கொத்திப் போனா
ஏன் இதயத்த
உனக்கு தருவேன்
அந்த வைரத்த
வானத்த
நீ
காட்டு
உன்
குடும்பத்தில்
என்னை
ஒரு ஆளா
மாத்து
கூட்டிப் போ குருவியே
உன் கூட்டில் என்னே சேர்த்தா
ஒத்து போவேன்
ஒரு கூட்டா
இல்ல
கத்துக்குறேன்
சமத்தா
நீ என்னை கொஞ்சம் பாரேன்
அக்கினி சிறகா தானே
ஏய் குருவியே
என்னை பார்த்தும் பார்காம
போறியே
என்னை இங்கேயே விட்டு
போறியே
போறியே
என்னை கொஞ்சம் தூக்கிப் போனா என்ன?
என்னை கொஞ்சம் தூக்கிப் போனா என்ன?
ஏன் காதல் பறவையே
என்னை கொஞ்சம் தூக்கிப் போனா என்ன
அடியே இதுக்குமேல என்னை சொல்ல
அடியே குருவியே
ஓய்...குருவி... குருவி...
போ...

கருத்துகள்