அழகியல் தான் பெண்ணோ
அடுப்பங்கரை அவர்கள் கண்ணோ
அவள் விண்மீனும் அல்ல
வெட்ட வெளியும் அல்ல
சரி என்னும் சொல்லுக்கு நிகர் ஆனவள்
உளமார்ந்து வாழ்த்த வாழ்வளித்தவள்.
அவள் என் பாட்டி, தாய், மனையாள்,
அக்கா, தங்கை, மருமகள், பேத்தி, இன்னும்
நிறைய பந்தங்களாய்
...வருபவள்,
வருகின்றாள்...
வருவாள்.
அடிகளையும், கருத்துகளையும் நிறைத்து கொடுக்க யாராலும் முடியும். ஆனால் என் மனதிற்கு அவ்வாறு செய்தால் சலிப்பு ஏற்பட வாய்ப்பு கூடுமோ என அய்யம் உண்டு. அதன் பொருட்டு நான் இங்கு பெண் யாருக்கும் நிகரானவள் என்பதை இவ்வாறு இயற்றியுள்ளேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக