A குட்டி Story

இந்தாங்க அப்பா சாப்புடுங்க
என்ன மா இது ?
சோறு...சாம்பார் சோறு...
சாப்புடுங்கப்பா
சரிடாம்மா
.
.
.
சாப்பிட்டிங்களா ?
நல்லருக்கா ?
ம்ம் நல்லாருக்கு
சூப்பரு
வேற என்ன மா சமைச்சுறுக்க?
உங்களுக்கு
இப்ப அடுத்து இலையை பரிச்சு சமைச்ச கீரை சோறு...
(அதே மண்ணில் கொஞ்சம் பக்கத்து வீட்டு செடியில் பரித்த இலைகளை போட்டு  வைத்த கீரை சோறு).
கீரை சோறும் நல்லா பண்ணிருக்கியேமா
சூப்பரா இருக்கா
சூப்பரு
இது குழந்தைக்கும் அதன் தந்தைக்கும் நடக்கும் உரையாடல்... இப்போது ஒருமுறை திரும்பவும் படித்துப் பாருங்கள்... குழந்தைகளின் பேச்சு, ஒலி, மொழி உச்சரிப்பு, கண் சிமிட்டல், விளையாடும் விதம், முறை என எல்லாம் குழந்தைத்தனம் குழந்தைத்தனம் தான்
குழந்தைகள் உலகம் இன்பமானது...
கொஞ்சம் நுகர்வோர்...

கருத்துகள்