வண்ண வண்ண பூச்சி
வண்ணத்துப்பூச்சி
பட்டாண் பட்டாண் பூச்சி
பட்டாம்பூச்சி
பூவின் மீது ஏறி தான்
தேன் கொஞ்சம் எடுத்குதா !
புல்லின் மீது அமர்ந்து தான்
கண்ணிமை போல் இமைக்குதா !
சிறகுகளை ஆட்டியே
சிகரங்கள் ஏறுதா !
கொள்ளை அழகு கொண்டே
கொள்ளை கொண்டு போகுதா !
பிறக்கும் போது புழுவாய்,
இறக்கும் போது பூச்சியாய்,
வாழும் போது தன்னை
புதுப்பித்து கொண்டே
வாழும் ஒரு புச்சி
பட்டாண் பூச்சி.
பாட்டி சொல்லும் குறிப்பு :
பாட்டி சொல்லும் கதைகளில்
அறிவு நிறைய உண்டு
அடுத்து வரும் கதைகளில்
அறிவை நாமும் தேடுவோம்.
தமிழ் மறவன் பட்டானே
தமிழ் நாட்டு பட்டாணாய்
தேர்வு செய்து உள்ளோமே.
கருத்துகள்
கருத்துரையிடுக