விவசாயம் எங்கள் வாழ்வு
பயிர் செய்தல் எங்கள் தொழில்
இனிக்க இனிக்க கரும்பு
துவர்க்க துவர்க்க பாகற்
புளிக்க கசக்க பழங்கள்
என எத்தினை சுவைகளோ
அத்தனையும்
யாம் படைத்தவை
படைத்து மகிழ்ந்தவை
உழுது எடுத்தவை
கைகள் பறித்தவை
அறுவடை செய்தவை
நீருக்கு நீராய்
வெயிலிற்கு வெயிலாய்
மழைக்கு மழையாய்
உரத்திற்கு உரமாய்
ஈர மண்ணாய்
ஈட்டி பாய்ந்த காலாய்
உழைத்து, படைத்து, உயிர்த்து
எடுத்து கொடுத்து மகிழ்ந்து
மலர்ந்த மனமுள்ள
மனிதர்கள் நாங்கள்
உழவர்கள் நாங்கள்
என்றும் உழவனாய்
பொன்மனோஜ் சு. பொ.
கருத்துகள்
கருத்துரையிடுக