நூல் பூத்த புத்தகம்

கற்பனை உலகினில் வீற்றிருந்தேன்
தலை நிமிர்த்தி நான் பார்த்திருந்தேன்
இங்கு மன்னனும் நானாய்
அமைச்சனும் நானாய்
கவியும் நானாய்
மக்கப் பிரதிகளும் நானாய்
முடியாட்சி பூண்டிருந்தேன்
முலித்து முலித்து பார்த்திருந்தேன்
எனக்கு பின்னே யார் வருவர் என 
காத்திருந்தேன்
நான் வீற்றிருந்தேன்
எழுந்து பார்க்கையில்
வீற்றிருந்தேன்
நன்கு விழித்து பார்க்கையில்
வீட்டின் ஒரு ஓரமாய் நான் வீற்றிருந்தேன்
உறவும் இல்லை
துறவும் இல்லை
யாரும் இல்லை
வெகு நாளாய்
வெகுமதி நாளாய்
என்ன செய்வேன்
எப்படி பிழைப்பேன்
என்னை மறைக்க நினைக்கிறார்
அவர் என்னை அழிக்க நினைக்கிறார்
ஆனால் அவர் எதிர் நாட்டு மன்னனும் இல்லை
என்னை வெல்ல சக்தி உடையனும் இல்லை ஆனால்
கொஞ்சும் வலையை பிண்ணியே
என்னை சலிக்க நினைக்கிறார்
என்னை சிதைக்க துடிக்கிறார்
சிறையில் அடைக்கிறார்
என் பக்கங்களை அழிக்க நினைக்கிறார்
வீழ்வேனா என அரித்து எடுக்கிறார்
காத்திருப்பேன் இன்னும் வீற்றிருப்பேன்
என்றும் மன்னனாக காததிருப்பேன்
மறவாமல் காத்திருப்பேன்,
உங்கள் புத்தக பேழையில் வீற்றிருப்பேன்
இன்னும் பூத்திருப்பேன்.
சிலந்தி வலையினுல் நான் பூத்திருப்பேன்
கரைக்கும் கரையண்ணனுடன்
வீற்றிருப்பேன்.
பூத்த வளையை பிய்த்து எடுத்து
பார்த்து சொல்லுங்கள் என் இடையை
பின் படித்து சொல்லுங்கள் என் விலையை
என்னை படித்து முடித்தால்
என் முடிசூடா மன்னனாவீர்
இந்தக் கணம் முதல் நீர் மன்னராவீர் !

கருத்துகள்