விண்ணை தொடத் தேவையே இல்லை

விண்ணை தொடத் தேவையே இல்லை
துரத்தும் தோல்விகள் தோற்கடிக்குமா உன்னை
எழுந்து வா விண்ணை 
தொடத் தேவை இல்லை
முதலில் எழுந்து வா 
தலை நிமிர்ந்து வா
சரித்திரம் உன் பெயரினிலே 
இனி அமையட்டும் 
மீண்டு வா
உறக்க சொல்வோம்
இந்த நூற்றாண்டின் முடிவில் நீ 
இருப்பாய் 
குடி இருப்பாய்
என.
மனதில் எங்கும் நிலைத்திருப்பாய்
உயிர்ப்பாய் 
என.
கடந்து வா 
மெல்ல நனைந்து வா
இருக்கும் ஒவ்வோர் பிறப்பும் 
நினைக்கும் அளவு  உயர்ந்து வா
இனி தோல்விகள் உனை வெல்ல 
வேலையே இல்லை. 
திட்டங்கள் முடுக்கி வா
தீர்வுகள் எடுத்து வா
நினைவில் நீ அழிவில்லா படைப்பு
கதையில் நீ நாயகன் 
இனி உலகம் உன் பெயர் சொல்லும்
உழைப்பே இனி வெல்ல வழி சொல்லும்
உழைத்து அருத்திடு கதிரை
வெற்றி என்னும் நெற்க்கதிரை 
கேலியும் பேச்சும் சுற்றி நிற்க
அமைதி காத்திடு 
உன் வெற்றி கதை சொல்லட்டும் 
அது பதில் சொல்லட்டும்
இன்று உன்னை உனர் 
நேற்றைய பிழையை அரை 
நாளை
விண்ணை தொடத் தேவையே இல்லை
விண்ணும் உன் காலில் விழும் மழையாய்...

கருத்துகள்