கடந்து வந்த பாதை
நடந்து சென்ற வழி
செய்து முடித்த வினை
இனி விதைத்து உருமாறட்டும்
உரு செடியாகட்டும்
செடி மரமாகட்டும்
மரம் பூ, காய், பழம், என உயிர் வாழட்டும்
நம்பிக்கை உனதாகட்டும்
அது உழைப்பாகட்டும்
ஓடும் நீராக உன் வலி எல்லாம்
வழி ஆகட்டும்
வழி எங்கும் இயற்கை உரமாகட்டும்
அந்த புத்துணர்ச்சி
புத்தாண்டாய் உலகாலட்டும்
மனம் வழி காணட்டும்...
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக