சென்னை கானா பாடல்
ஆசை இல்லா மனிதனைத்தான் தேடி சுத்தும் உலகம்
அது ஆசைப்பட்டு ஆசைப்பட்டு ஏங்கி வெடிக்கும் பொழுதும்
காணலை அப்படி ஒருத்தனை காணலை
தோனலை அப்படி எவனுக்கும் தோனலை
சுத்தும் வேகம் கொறைஞ்சி போச்சு
இப்ப சுத்த முடியலே
சுத்தி சுத்தி அழுத்துப் போச்சு
இப்ப புத்தி சரியிலே
.
.
.
என்னா என்னா ஆச்சி
மலேரியால போச்சி
என்னா என்னா ஆச்சி
காலராவா போச்சி
கடலுக்குள்ள நாக்டிலுகா வாழ முடியல
இப்ப கடலு மேல் வந்த உயிரினத்த என்ன பண்ணுவ
.
.
.
ஆசை இல்லா மனிதனைத்தான் தேடி சுத்தும் உலகம்
அது ஆசைப்பட்டு ஆசைப்பட்டு ஏங்கி வெடிக்கும் பொழுதும்
காணலை அப்படி ஒருத்தனை காணலை
தோனலை அப்படி எவனுக்கும் தோனலை
சுத்தும் வேகம் கொறைஞ்சி போச்சு
இப்ப சுத்த முடியலே
சுத்தி சுத்தி அழுத்துப் போச்சு
இப்ப புத்தி சரியிலே
.
.
.
காக்காவுக்கு சாப்பாடு தான் போட்ட உலகுல
அந்த காக்காவயயே சாப்பாடா தான் செஞ்ச பயலுக
வீட்டுக்காரி நச்சு
நம்ம ரேட்டுக்கடை பஜ்ஜி
போட்டு ரெம்ப நாளாச்சு
செத்து போனான் நம்ம சன்னாசி
போட்டு ரெம்ப நாளாச்சு
செத்து போனான் நம்ம சன்னாசி
.
.
.
வாழ்க்கை எங்க மச்சி
காசுக்குள்ள வச்சி
காசுக்குள்ள தச்சி
ஆக்கி ரெம்ப நாளாச்சு
செத்து போனான் நம்ம சன்னாசி
ஆசை இல்லா மனிதனைத்தான் தேடி சுத்தும் உலகம்
அது ஆசைப்பட்டு ஆசைப்பட்டு ஏங்கி வெடிக்கும் பொழுதும்
காணலை அப்படி ஒருத்தனை காணலை
தோனலை அப்படி எவனுக்கும் தோனலை
சுத்தும் வேகம் கொறைஞ்சி போச்சு
இப்ப சுத்த முடியலே
சுத்தி சுத்தி அழுத்துப் போச்சு
இப்ப புத்தி சரியிலே
சென்னையில் கானா பாடல் இசைக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம்.
தவறுகள் ஏதேனும் இருந்தால்
மன்னிக்கவும்.
திருத்தங்கள் பரிந்துரைத்தால் திருத்தும் உள்ளம் கொண்ட
சு. பொ.
#இனியதீபஒளித்திருநாள்வாழ்த்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக