வாசித்திடுங்கள்
புதிய அனுபவம் கிடைத்திட…
நல்ல ஞானம் அடைந்திட…
கல்வி கண் பயின்றிட…
நல்லதொரு எண்ணம் விதைத்திட…
வாசித்திடுங்கள்.
புத்தகங்களை வாசித்திடுங்கள்…
புத்தகங்களாய் வாசித்து இருங்கள்…
நாமும் வாழ்வோம் புத்தகங்களாய்…
நானும் உங்களுடன் இணைந்தே
தேடுகிறேன் – என்னை…புத்தகங்களுள்
இந்தக் கருத்து என் பக்கமோ அல்லது வருங்காலத்தில் வர இருக்கும் புத்தகமோ கருதி சொல்லவில்லை.
கிடைக்கும் தாள் ஒன்றாயினும்
அது செய்தித்தாளாய் இருப்பினும்
பொட்டலமாய் மடித்து இருப்பினும்
வெடித்த துண்டாய் இருப்பினும்
ரோட்டோர கரும்பலகையாய் இருப்பினும்
வாசித்திடுங்கள்.
தினம் தினம் பதினைந்து நிமிடம்
இல்லை முடியாது என்போர்க்கு
கண்டிப்பாக முடியும் ஐந்து நிமிடம்
ஒதுக்கினால் கிடைக்குமே இரண்டு நிமிடம்
அய்யா ஒரு வரியானாலும் தமிழில் வாசியுங்கள்…
ஆங்கிலம் புடிக்குமா படியுங்கள்
ஒரு ஒரு வரியாக ஆரம்பியுங்கள்
எம்மொழியில் ஆர்வமோ அதை படியுங்கள்.
முடிந்தால் ?
தமிழ் மொழிக்கு உயிர் கொடுங்கள்.
முயற்சித்தால் !
அதனுடன் நம் தாய் மொழியின் அகராதியை புதுமை படுத்துங்கள்.
கையேந்தி நிற்கும் உங்கள் சு. பொ.
இஞ்சி( பொருள் பண்டைய காலத்தில்) – மதில் சூழ் கோட்டை.(இஞ்சி சூழ் தஞ்சை என்பர்) வாசிப்பு ஒரு மதிலாய் காக்கும் என புரிந்து கொள்ளலாம்.
நம் மதுரையில் உள்ள வடபழஞ்சி, தென்பழஞ்சி ஆகியவையும் இவற்றில் வருபவை செயற்கையாக எழுப்பப்பட்ட கட்டிடங்கள் குறிக்கும் சொல்.
கருத்துகள்
கருத்துரையிடுக