மழலை கழனிலை

வெட்டுக்கிளி ஒன்னு விட்டு விட்டு
பறக்குது
வட்ட நிலா ஒன்னு வட்டமிட்டு
சிரிக்குது
கட்டெறும்பு ஒன்னு கண்ண கட்டி நடக்குது
காட்டுக் குயில் கூட காட்ட விட்டு
பறக்குது
சண்டக்கோழி ஒன்னு சினங்கொண்டு மொறைக்குது
எதிரும் புதிருமா எல்லாமே
கெடக்குது
கண்ணால் காண்பது எல்லாம்
பொய்
காதால் கேட்பது எல்லாம்
பொய்
தீர விசாரித்தலே
மெய்
அய்ய்ய்ய்
விசாரிக்கலாமா  விசாரிக்கலாமா
வெட்டுக்கிளிய கேட்டா வெட்டருவா
எடுக்குது
வட்டநிலவ கேட்டா வேடிக்கையா
சிரிக்குது
கட்டெறும்ப கேட்டா கண்ணு வீங்கி
சிவக்குது
காட்டுக்குயில கேட்டா விம்மி விம்மி அழுகுது
சண்டக்கோழிய கேட்டா பட்டுனு உண்மைய
உடைக்குது
என்னனு சொல்லுச்சாம்
சண்டை கோழி
கேட்போமா
மனிதர்கள் காட்ட அழிக்கறாங்க
மரத்தையும் நிலத்தையும் அழிக்கிறாங்க
வானுத்து நீர அழிக்கிறாங்க
அருவிய கூட மறிக்கிறாங்க
அரிய உயிர்களா ஆன பின்பும் அழிக்கிறாங்க
எங்கள அழிக்கிறாங்க
எங்கள் வாழ்வ அழிக்கிறாங்க
வழி மறிக்கிறாங்க.
மனிதர்கள் வாழ எங்கள அழிக்கிறாங்க !
கேட்டது எல்லாம்
பொய்யா மெய்யா
தேடுங்க சிறுவர்களே
உண்மைனு தெரிஞ்சா
தவற தடுக்க வாருங்கள் குழந்தைகளே...

கருத்துகள்