ஒரு வருடத்திற்கு முன்பு எழுதியது
(குடிமைப்பணி தேர்விற்க்கா சென்னையில் படித்த பொழுது)
என் அனைத்து நண்பர்களுக்கு சமர்ப்பணம்
உதயத்தில் உதித்தது
உலகம் இறுதி வரை துடித்தது !
உதிரத்தில் உதித்தது
உலகம் இறுதி வரை துடித்தது !
சரிதத்தில் இனைந்தது,
சகலமாய் இறுதிவரை
நீதானே !
சிகரத்தை இழைத்தது
சிந்தனை விடுவதை (விடுகதை) அமர்த்தி சிலைத்தது
சிங்கத்தை அனைத்தது
சிறு வயதை அழகாய் படைத்தது
என் கேள்விகளுக்கு
எளிய பதிலமைத்தது
நீதானே !
என் உயர்வின் மகிழ்ச்சி நீயாய்
என் உயர் எண்ணம் நீயாய்
என் குருதியின் சுவாசமாய்
என் கோபத்தின் எதிர்
நின்றவன் நீதானே
யார் என்பது
உன்னை யார் என்பது
யான் என்றில்லாமல் யாமென்பதா
இல்லை
யாப்பிற்கு இலக்கணம் நீ என்பதா
என் நண்பன் அது நீ என்பதா
இல்லை
என்னை இப்போதும் திருத்தும்
நண்பா
நாம்
நண்பர்கள்.
நண்பா ! நன்றி !
கருத்துகள்
கருத்துரையிடுக