தத்துவம் நண்பா

நேரம்
இங்க நேரம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது
நேரத்துக்கு ஏத்த மாதிரி மாறுறவன்,
நேரத்த தனக்கு ஏத்த மாதிரி மாத்துரவன்,
நேரத்த கோட்டைவிட்டு ஓடுறவன்,
இவங்களல ஏதோ ஒன்னு தான் நாம
நேரம்
இங்க நேரம் தான் எல்லாத்தையும் முடிவுபண்ணுது.
இங்க வாழ்ற யாருமே வாழ்க்கைல தோக்குறது இல்ல
செய்ற செயல் வேணா தோக்கலாம். ஆனா அதையும் நாம ஒரு முயற்சியா பார்க்கலாம். பார்க்கிற பார்வைல தான் எல்லாம் இருக்கு.
நாம வாழ்க்கை தோத்துட்டா எப்படி இன்னும் உயிரோட இருக்கோம்,
சொல்லுங்க பார்ப்போம் ?
வாழ்க்கைன்றது உயிர் சம்பந்தபட்டது செய்யும் செயல் தொடர்பானது கிடையாது.
செய் அல்ல செத்துமடின்னு சொன்னது வேலைய 100 சதவீதம் ஒழுங்கா செஞ்சி முடிக்கக் தான்
எல்லாத்துக்கும் எதிர்மறை எண்ணத்தை எடுத்துக்காதிங்க.
இங்க நல்லா உழைக்கிறவங்களுக்கும் தோல்வி வரும், அதுக்காக அவங்க உழைக்கலைன்னு சொல்லமுடியாது அங்கயும் நேரம் வேற ஒரு முடிவ தான் எடுத்ததாக பார்க்கனும். இன்னும் பிரம்மாண்டமா நல்ல செயல் நடக்க இருக்கதா பார்த்தா அத விட சிறப்பு வேற இல்ல...
செயல் தோல்வியை வாழ்க்கையே தோல்வியுற்றதாக எண்ண வேண்டாமே...
Be bold, positive and get into the war...
Love to war,
Velayutham.

கருத்துகள்