பெண்ணியம் தவறேல்
அவன் பண்றான்னு நீயும் அதே தப்ப பண்ணா அது சரி ஆகிடுமா
தப்புனா அது தப்பு தான்.
அதுல ஆம்பள பொம்பளை திருநங்கைன்னு பிரிக்கலாம் முடியாது.
அவன் குடிக்கிறான்னு இன்னிக்கி நீயும் குடிப்ப, கேட்டா இது எங்களுக்கான சுதந்திரம்ப…
குடிக்கிறது தப்பு அத அவன் பண்ணா என்ன நீ பண்ணா என்ன தப்பு தப்பு தான் !
சுதந்திரம்றது ஆத்துல ஓடுற தண்ணி மாதிரி
அளவா ஓடும் போது ஒன்னும் தெரியாது அதே போல எல்லாருக்கும் பயண்படும். ஆனா அதுவே வெள்ளமா ஓடுச்சு ஒருத்தனும் எறங்க மாட்டான்… இறங்குனவன அப்பிடியே அடிச்சு சாகடிச்சிடும்… யாருக்ககும் பயணில்லாம போயி கடல்ல சேரும். அதுபோல தான் சுதந்திரமும். சில விதிமுறைகள நமக்குன்னு உருவாக்கி அத மதிச்சு வாழ்றது தான் சுதந்திரம் மிதிச்சி வாழ்றது இல்ல.
சொன்னது புரிஞ்சிருக்கும்ன்னு நம்புறேன்… போ….
என்ன இன்னும் நிக்கிற போமா...(ஒரு தாயின் குரலில் ).
குறிப்பு :
பெண்ணியம் பேசுவது தவறன்று ஆனால் எது பெண்ணியம் என்று புரியாமல் பேசுவது தவறு.
யாருக்கேனும் உடல், மனம் சார்ந்து எதுவும் தீங்கு விளைவிக்குமாயின் அது அனைவருக்கும் தவறானதே.
ஆண்கள் அனைவரும் தவறு என்ற எண்ணம் தேவை அற்றது. இது ஒருவர் செய்யும் தவறை அனைவருக்கும் வகுத்தளிப்பதற்கு சமம். அந்த தவறையும் செய்திடல் தவறாகவே அமைந்திட வாய்ப்புள்ளது. இதை முடிந்தால், சிந்தித்தால் மகிழ்ச்சி.
இங்க அறிவுரை சொன்னா கூட அது ஆணாதிக்க சமூகம்ன்னு சொல்லறது எந்த விதத்துல ஞாயமா இருக்கும்ன்னு தெரியல !. So it’s already on your hands.
#பெண்ணியம்
நன்றி !
கருத்துகள்
கருத்துரையிடுக