நெஞ்சம் புடைத்து,
எழுமின் விதைத்து,
வெளியே வா !
வெண்ணிலவே.
உள்ளம் நிறைத்து
கண்கள் விழித்து
வானில் வா !
வெண்ணிலவே.
வெண்ணிலவே ?
வெண்ணிலவே ?
நெஞ்சம் புடைத்து,
எழுமின் விதைத்து,
வெளியே வா !
வெண்ணிலவே.
உள்ளம் நிறைத்து
கண்கள் விழித்து
வானில் வா !
வெண்ணிலவே.
வெண்ணிலவே ?
வெண்ணிலவே ?
தன்னிறைவே இல்லா
வெண்ணிலவே
இருளை போக்க வா
வெண்ணிலவே
வெண்ணிலவே ?
வெயில் சுடுதா
வெண்ணிலவே
கருக்காமல் மிளிரும்
வெண்ணிலவே
எப்படி வெண்ணிலவே
வெயில் பட்டும்
இனிக்கிறாய் ?
வெண்ணிலவே
தண்ணீர் தவிக்குதா ?
வெண்ணிலவே
தாகம் தீர்க்கவா ?
வெண்ணிலவே
குடை வேண்டுமா ?
வெண்ணிலவே
உன்னை கொடையாய்
கொண்டோம் வெண்ணிலவே
நேரமாகுது வெண்ணிலவே
சாப்பிட போகனும் வெண்ணிலவே
வா வெண்ணிலவே
மேகம் மறைக்கிறதா வெண்ணிலவே
மேகத்தை கிள்ளி விடவா
வெண்ணிலவே
மேகங்கள் அழுமே வெண்ணிலவே
மழை இப்படித்தான் செய்யுமோ
வெண்ணிலவே
அம்மா கூப்பிடுகிறார்கள்
வெண்ணிலவே
நேரமாகுது வெண்ணிலவே
வா வெண்ணிலவே ?
போ வெண்ணிலவே !
உன்னை நாளை
சந்திக்க வருகிறேன்.
இன்று நான் கோபமாக
செல்கிறேன்
உன்னை காணாததால் !
வெண்ணிலவு
நெஞ்சம் புடைத்து,
எழுமின் விதைத்து,
வெளியே வருவேன்!
வெண்ணிலவாய் நாளை.
கருத்துகள்
கருத்துரையிடுக