ஊஞ்சல் என்னும் வாழ்க்கை
வாழ்க்கையை ஊஞ்சலுடன் ஒப்பிட்டு பேசுவது மிக அழகாக வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவும்.
ஏன் ஊஞ்சல் ? என்ற கேள்விக்கு,
அதன் அமைப்பே பதில் சொல்லும் கீழ் வருவன அவற்றை எடுத்துரைக்கும் வரிகளாம்.
ஊஞ்சலில் சில வகைகளை (நமக்கு தேவையானது) எடுத்துக் கொண்டால் விளங்கும்.
# ஒற்றை முடிச்சு
# இரட்டை முடிச்சு
# நான்கு முடிச்சு
( இங்கு குறிப்பிட்டுள்ள பெயற்களானது புரிதலுக்காக இடப்பட்டது )
ஒவ்வோர் முடிச்சும் ஒரு ஒரு வாழ்வின் காலத்தை பதிவு செய்யும் இயல்புடையது. முதலில்,
ஒற்றை முடிச்சு :
இந்த வகை ஊஞ்சல் நம் குழந்தை பருவத்தை உணர்த்தும்.
எப்படி !
தாய் தந்தை இருவரும் இணைந்து தெரியும் பருவம். பாசம் ஒரே வகையாய் பரிமாறும் வயது. மிக வேகமாக முன்னும் அதை சலைக்காமல் பின்னும் என இருக்கும் ஒரு காலகட்டம். பெற்றோர் துணையோடு தவழ, உட்கார, எழுந்து நிற்க தாவ என முன்னும் பின்னும் மாறி மாறி வரும் குழந்தை பருவம்.( இங்கு முன்னும் பின்னும் என்னும் வார்த்தை ஊஞ்சல் போன்று நம் வாழ்க்கையும் நகரும் இயல்பை உணர்த்தும்) எடுத்துக்காட்டாக குழந்தை எழுந்து நிற்க முயற்சி செய்யும்போது முயலும், எழும் பின் கீழே விழுந்து அழுது பின் எழுந்து நிற்கும். தாய், தந்தை என ஒற்றை கயிற்றில் அடங்கும் இயல்புடன் இருந்த காலமாக அமையும். இதில் வெற்றி முன்னாகவும் சில தவறுகள் பின்னோக்கியும் இருக்கும். ஆனால் ஒரே முனைப்பாய் செயல்படுவோம். இங்கு அப்பா, அம்மா, உற்றார் உறவினர் ஊஞ்சலை நகர்த்துவர்.
இரட்டை முடிச்சு :
இரு துருவம் தாங்கி செயல் படும் வயதின் தொடர்புடையது.
தாய் தந்தை என இருவரும் எதிர் நின்று தாங்குவர். ஆனால் சமமாக இருக்கும். இங்கு நண்பர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து செயல்படுவர். விளையாடும் குழந்தை ஆதலால் நட்புடனே நாட்டமாக இருப்போம். ஆனால் தாய் தந்தையே ஊஞ்சல் நகர்த்த வலிமையுடன் இருப்பார்கள். நண்பர்கள் பங்கு செய்வர். அவ்வளவே இந்த வயதின் இயல்பு.
நான்கு முடிச்சு :
இதில் நால்வர் நம் வாழ்க்கையில் சம்பந்தப்படுவர். தாய் தந்தை மனைவி/கணவன் வழி தாய் தந்தையர் ஆவர். இந்த ஊஞ்சல் தள்ளுதல் என்பது கொஞ்சம் எளிமை. ஆனால் முன் செலுத்துபவர் பொருத்தது. இங்கு நண்பர் மற்றும் உறவினர் என நம் சமூகமே நம்மை முன் நிறுத்த மற்றும் பின் இழுக்கும் சக்தி கொண்டிருக்கும். இதில் தான் வாழ்க்கை வாழ, மேன்மை அடைய, உலகம் அறிந்து செயல் பட என வாழ்க்கையில் நாம் யார் என அறியவும், எதற்க்காக இப்பிறவியில் பிறந்தோம் என அறியவும் நேரிடும். அதன் வழி பயணிக்கவும் செய்வோம். இதில் உள்ள நான்கு முடிச்சும் நாம் நலமுடன் வாழ மிகவும் முக்கியம். அதை அறிந்து செயல் பட நல்வாழ்க்கை வாழலாம். சில ஊஞ்சல்கள் நான்கு முடிச்சும் தனித்தனியே இருக்கும். சிலவற்றில் இவை இரண்டு புறமும் கீழிருந்து நான்காக தோன்றி இரண்டு முடிச்சாய் மேல்நோக்கி முடியும். இதில் எப்படி இருந்தாலும் ஊஞ்சல் ஆடுபவர், அதை தள்ளுபவர் மற்றும் அமரும் நபர் பொருத்தே அமையும்.இதுவே இயல்பு. சிலர் வாழத்தெரியாமல் ஓரமாக அமர்ந்து ஊஞ்சல் கோனளாக வழிமாறும் வாய்ப்பும் உள்ளது. அந்த சமயத்தில் தள்ளுபவர் தன் வேலையை சரிவர செய்தாலும் அமருபவர் பொருத்து திசை மாறும். இந்த அனுபவம் பெறும் போதே நம் அடுத்த தலைமுறையின் முதல் முடிச்சை ஆரம்பித்து அதன் சில ஊஞ்சல் முடிச்சுகளை அவிழ்த்து அந்த தலைமுறைக்கு பாடம் கற்பிக்க முனைய வாய்ப்பு உள்ளது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கப் பெற வாய்ப்பில்லை. கிடைக்கும் வாழ்வை வாழ்ந்து கற்க வேண்டும். வாழ்க்கை வாழத்தான் என்பது இங்கு நிறைய சகோதர, சகோதரிகள் மறக்கின்றனர். முன்பு சொன்னது போல் வாழ்க்கை என்னும் ஊஞ்சல் முன்னும் பின்னும் நகரும் ஒரு இயல்புடையது அதை நாம் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து நகர்த்த நிறைய அற்புதங்களை காணலாம். இதில் சிலருக்கு சில உறவுமுறை இல்லாமல் இருப்பதாக நினைப்பர் ஆனால் அது உண்மை இல்லை. யார் இல்லை என நினைக்கிறாறோ அவர் இடத்தை, அந்த மனிதரின் கடமையை யாரோ ஒருவர் சிறப்பாக செய்து கொண்டு தான் இருப்பர். எனவே அனைவரையும் நேசிப்போம்
வாழ்க்கை என்னும் ஊஞ்சலில் / ஊஞ்சல் என்னும் வாழ்க்கையில்பயணிபோம்.
– சு. பொ.
கருத்துகள்
கருத்துரையிடுக