பிரபஞ்சத்தின் கதை

பிரபஞ்சத்தின் கதை


கிரகங்கள் சிலவற்றை மறைக்க வேண்டும் என அன்று அவர் முடிவெடுத்தார்.
அடுத்த நொடி எப்படி மறைக்கலாம் என யோசனையில் ஆழ்ந்தார். யோசித்தார், அயர்ந்தார், உறங்கினார். இருள் சூழ்ந்து கண் உறங்கின
ஏன் மறைக்க வேண்டும் ? மறைக்க வேண்டும் அவ்வளவே, எல்லாவற்றிற்கும் காரணம் சொல்ல வேண்டாமே என்பதை உணர்த்த நினைத்தார் போலும்.
சில வினாடிகளில் திடீர் என சத்தம் கேட்க மனம் விழித்தது. என்ன மாயை....
விடை கிடைத்தது....
அந்த இருளும் சத்தமும் அமைதியை ஏற்படுத்த அதையே, அப்படியே செய்ய முற்படலாம் என முடிவெடுத்தார்.
என்ன இருளும் சத்தமும் அமைதியை ஏற்படுத்துமா ?
ஆம் போர் என்னும் இருளுக்கு பின் வருவது சத்தம் அதன் பின் அமைதி இதுவே இயல்பு எனப்பட்டது.
ஒரு துளை ஒன்று உருவாக்கினார். அதிலும் இருள் சூழ்ந்த கருந்துளை உருவான சில நேரத்தில். அவர் மறைக்க நினைத்த  கோள்களை உள்ளே அனுப்பினார். ஒவ்வோர் கோளும் தன் சக்திக்கு ஏற்ப ஒரு விசையை கொடுத்தது.
இருள் சுழன்றது இமை மூடி துறப்பது போல் ஆனால் ஒரு நொடிக்கும் குறைவான நொடியில் அனைத்தும் சுழன்று மறைந்தன. எங்கு சென்றன என யோசிப்பதுக்குள் பல நூறு ஆண்டுகள் கழிந்தன. ஆனால் என்ன நடந்தது, நடக்கிறது, நடக்கும் என ஒருவருக்கே தெரியும்.
கருந்துளை எங்கு சென்றது என யோசித்தவர்கள், யோசிப்பவர்கள் கேள்வி எழுப்ப
பதில் வந்தது அவரிடம் இருந்து
இருக்கும் இடத்திலேயே இருக்கும் இறக்கும் வரையில், கூர்ந்து நோக்கினால் தொலைவு அறியலாம். அதே இடத்திலா என அவரிடம் கேட்க நினைத்த மாந்தர்க்கு
அம் எண்ணும் ஒளி இசையாக வானொலி அடித்தது.
தொலை நோக்கிகள் உருவாகின, கருந்துளை இருந்த இடத்தை கூர்ந்து நோக்கி ஆராய முற்பட்டனர். ஆச்சரியம் காத்திருந்தது அவர்களுக்கு பெருந்துளைகள் காணப்பட்டது ஆனால் அளவில் சுருங்கி இருந்தது. மறைத்து வைத்த அனைத்தும் இப்போது வெளிப்பட ஆரம்பித்தது. மறைத்தவர் மறைவை தற்போது நீக்க நினைத்தாரோ என்னவோ !
இனி மறைத்து பயன் இல்லை என யோசித்த அவர், சுழல் பந்து போல் இருந்த அதை சற்று ஊத சுழல் பந்து சுழன்று அருகில் இருக்கும் அனைத்தையும் ஈர்த்தது. பெரிதானது பெரிதானது என்ன தான் இருக்கிறது அந்த கருந்துளையில் என பார்த்த மனித பிம்பத்துக்கு தெரிந்தது எல்லாம் ஆனால் என் என்று புரியவில்லை. யோசிக்கும் நொடிக்கணக்கில் தீ போல எரிய ஆரம்பித்தது.
இருள் ஒளி வீசியது அம் என்னும் ஒலி அது.
மின்னல் வெட்டினார் போன்ற வெளிச்சம் பின் சத்தமும் மெதுவாய்  ஒலிக்க பிரம்மாண்ட ஒளி உருண்டை உருவெடுத்தது அவ்உருண்டையை சுற்றி சில கோள்கள் சுத்தின. ஒவ்வொன்றும் ஒரு வண்ணம் வெவ்வேறு தன்மை வெவ்வேறு உயிர். நோக்கிகளை துளைத்து பார்த்த மனித பிம்பம் உணர்ந்தது இது நம் அறிவை தாண்டிய செயல் இதை அறிந்து கொள்ள இன்னும் பல நூறு ஆண்டுகள் தேவை என.
இன்னும் முழுமையாக மறைவு நீங்கவில்லை என்பதை நினைத்தவாரே அனைத்தையும் பார்த்தார் அவர்.
அறியும் காலம் வரும் வரை காத்திருப்போம்.

கருத்துகள்