இதயமே உன்னுள் ஆயிரம் எண்ணங்கள்
அது ஒவ்வொன்றும் மின்னல்களின் பின்னல்கள்
வான் உயர் எண்ணங்கள்
கருகருவென மேகங்கள்
குழுவென பிரிந்த சொந்தங்கள்
மழை பொழியும் மேகங்கள்
பட்டணத்து பின்பமான சொந்தங்கள்
பிரிவிலும் வாழும் நதிகள்
பரிவு காட்டும் பந்தங்கள்
காலகாலமாய் இணைக்கும் நதிகள்
பணம் இருந்தால் ஓடும் பந்தங்கள்
பாசம் இல்லா வேசங்கள்
அட படபடக்கும் எண்ணங்கள்
உனக்கு முடிவே வேசங்கள்
முடிவே இல்லா எண்ணங்கள்
இதயமே உன்னுள் ஆயிரம் எண்ணங்கள்
அது ஒவ்வொன்றும் மின்னல்களின் பின்னல்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக