அய்யா: என்ன புள்ள, அப்படி பாக்குறவ ?
இந்த வெயில்ல அப்பன் போறான்னுனா
கொறட்டி ஒன்னு கொண்டா சூரியன அப்பிடியே துண்டா வெட்டிபுடுறவன்
கத்திரியாம்ல கத்திரி
அம்மா: வயசான காலத்துல இப்பிடியா பேசுவிக வேலைக்கி கெளம்புங்க
அய்யா: வேறென்ன செய்ய சொல்றவ
கொஞ்சம் தாமதமா போனா
அவன் பாதி உயிர எடுத்துப்புறான்
இது மீதிய எடுத்து புடுது
நம்ம தாமதமானாலும் இது வந்து நின்னு உங்கம்மா மாதிரி பல்லல்ல காட்டுது
அய்யா: ஏன்டி என்னென்னமோ இது வேனும் அது வேனும்னுவ
இத கேக்காம வாங்கி தரேன்றேன் அப்புறம் என்னவாம்
பிள்ளை: போங்கயா
அய்யா : உனக்கு ஆகுழம் இல்ல
சரிஇ நான் கெளம்புறேன் வேலைக்கி நேரம் ஆகுதுல அப்பறம் உங்க ஆத்தா பல்ல காட்டுவா :).
பிள்ளை: சிரிக்கிறாள்
கருத்துகள்
கருத்துரையிடுக