தத்துவம் நண்பா 14

ஒரு ரயில் பயணத்தில்
ஒரு அம்மா
ஏய் ஏய் ஏய் என்னப்பா பண்றிங்க உங்கனால என் இடம் போய்ரக்கூடாது
அம்மா நாங்க கொஞ்சம் சரி பண்ணா உட்கார்ந்து வருவோம்
அதலாம் சரியா வராதுப்பா
ஏன்மா எங்களுக்கு ரெண்டு சீட் இருக்கே
அதுல நாங்க சரி பண்ணிக்கிறோம்
ஒரு சீட் முழுவதும் பைகள் இருக்கும் தருவாயில்
அதல்லாம் நீங்க என்னமோ பண்ணிக்கோங்க எனக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது
என்னமா எல்லாரும் உட்கார்ந்து தான வரப்போரோம்
எப்பா நான் உட்காரனும்னு நினைச்சா உட்காருவேன்
படுக்கனும்னு நினைச்சா படுத்துட்டு வருவேன்
என்ன என்னமா பேசிறீங்க
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'
'யாதும் ஊரே' நா என்னன்னு தெரியுமா
சும்மா என் இடம் என் இடம்ட்டு
ஆமா நீங்க சும்மா ஒன்னும் வாங்கல
ஒத்துக்கிறேன்
அதுக்கு எங்கள்ல ஒருத்தருக்கு confirm ஆகல ஒருத்தருக்கு adjust ( சரி) பண்ணிக்கிறோம்ன்னு தான கேட்டோம்
நாங்களும் மனிசங்க தான் மா...
மனசுக்குள் ஓடியது
அதுக்காக நீங்க மிருகம்ன்னு சொல்ல வரல்ல
உங்கள மிருகத்தோட ஒப்பிட்டு அத அசிங்கமா மாத்த நான் நெனைக்கல
நீங்க நீங்களாகவே இருங்க
நாங்க பார்த்துக்றோம்
ஒரு புன்முறுவலுடன்
ஒரு சீட்டில் ஒருவரும் (lower)
மற்றொரு சீட்டில் இருவர் (upper) துணிப்பைகளை சரி செய்து அமர்ந்து கொண்டோம்.
மனிசங்கட்ட பேசினா நாம பேசுவது பயண்படும்
இவுங்கட்ட தொண்டை கத்த பேசி ஒரு
புரயோசனம்மும் இல்ல
சில விசயங்கள பேசி சரி செய்ய முடியாது நாமதான் சறிது வளைந்து போகனும்.இத அப்படி தான் பண்ணோம்.
கருத்து : பேசி புரியும்னா பேசாமல் இருக்காதிங்க.
கூட வரும் பயணிகளை (மனிதர்களை) சக மனிதர்களாய் மதியுங்கள்
யாரையும் வேறு மாநிலம் வேறு நாடு என்று இழிவாக நடத்தாதீர்கள்
எல்லோரும் ஒர் குலமே மனிதன்.
பணம் அதிகமாக இருப்பதால் மற்றவறை மதிக்காமல் இருக்காதீர்கள்.

கருத்துகள்