ஒற்றைக் கதம்பம்

பூ மாலை பூச்சூட
பூங்கொத்தை பூத்தேடி
வந்த நேரமோ
இது ராஜயோகமோ
பூங்கொத்தை பூ மன்னன்
பூச்சூட பூங்கொத்தை
தந்த நேரமோ
இது ராஜயோகமோ
பூவிலுள்ள பூக்கள் எல்லாம்
பூ வாசம் பாய
பூத்துக்குலுங்கும் பூவைத்தேடி
பூத்தேள் வராதோ
பூ மனதை கொண்ட பூவே
பூவாய் நீ பூலோகம் ஆள்வாயோ
பூமிதித்த பாதம் போல பூக்கள்
பூத்திருவாயோ
பூவுக்குள் பூவைக்கும் பூந்தோட்டமோ
அது உன் நேசமோ
பூவைக்கும் தேன் வாசமோ
இது பூக்கள் தேசமோ....

கருத்துகள்