அதோ அங்கே பார்
மலை
அழகான மேகங்கள்
மேகங்கள் சுற்றி ஒரு ஒளிச்சுடர்
சூரியன் தன் இதழ்கள் விரித்துக்கொண்டு இருக்கும் நேரம்...
சூரிய இதழ்கள் மேகங்களை முத்தம்
இடுகிறதா
இல்லை பூமியை முத்தம் இடுகிறதா
தெரியவில்லை
சூரியனின் பின்பம் சிறிதும் தெரியாமல் வைத்திருக்கும் பனி (மேகம்) பூமியின் மேல் படர்ந்து விரிந்து கிடக்கிறது
சூரியனின் பிண்பம் தெரியாமல் இருப்பதற்கு காரணம் பனி (மேகம்) என்றால் அது மிகையாகாது
இருப்பினும் ஒரு தலைவன் எப்படி
தன் தொண்டர் களை முன் எடுத்து செல்வது போல (வழி நடத்துவது போல)
பனி களை மிஞ்சிய தன் வெப்பத்தை
அதிகரித்துக் கொண்டே வரும் சூரியன்
முன்னேறுகிறான்
பல மேகங்கள் தடையை கடந்து செல்கின்றன
கடந்தான்
மெருகேற்றினான்
உயர்ந்தான்
உச்சியை தொட்டான்
அனைத்தும் விலகிக்கொண்டது
தெளிவாய்
ஒரு உயரத்தில்
ஒரு தலைவன்
சூரியன்
சூரியக் குறிப்பு :
ஆனால் இதில் வெற்றி
மேகத்திற்கே
மேகங்கள் வழி விடாமல் அந்த சூரியன் இந்த பூமியில் அதன் இதழ்களை பதித்திட முடிந்திடுமோ
தலைவனின் தொண்டனும் தலைவனே
வாழ்க தமிழ்.
கருத்துகள்
கருத்துரையிடுக