மருவி மருவி மாய்ந்தது – இங்கே
மானிடப் பிறவி
கருவி அற்று வாழ்வது – எங்கே
மானிடப் பிறவி
கழு தைக்க தெரியுமாம் கற்பூர
வாசனை
கழுதைக்கு தெரியும் மா கற்பூர
வாசனை
மருவி மருவி மாய்ந்தது இங்கே
மானிடப் பிறவி
குருவி கட்டிய கூடு – எங்கே
மானிடப் பிறவி
அடிமேல் அடிவைத்தால் அம்மியும் தகரும்
அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்
மருவி மருவி மாய்ந்தது இங்கே
மானிடப் பிறவி
மனிதம் கட்டும் பாலமாம் – இங்கே
மானிடப் பிறவி
அகத்தில் போட்டாலும் அறிந்து போடவும்
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்
மருவி மருவி மாய்ந்தது – இங்கே
மானிடப் பிறவி
துளைந்து போன நாட்களை தேடும்
மானிடப் பிறவி
துருவி துருவி கேட்டால் வருமோ
உண்மை மருவி
இது மனிதப் பிறவி
மானுடம் தழுவி.
* மருவுதல் தவறென்று கூற முடியாது.
* அது போதிக்கும் உண்மை அறிந்து
செயல் படுமாயின் நன்று.
* உண்மை பழமொழிகள் கண்டு அதற்கு தக்க இடம் கொடுக்க வேண்டும்.
* சிறிய முயற்சியே உணர்ந்து செயல் பட உங்களுக்கு தெரிந்த மருவிய பழமொழிகளை பதிவிடுங்கள் நம் பக்கத்தில்.
கருத்துகள்
கருத்துரையிடுக