இலக்கணம் எதிர் பார்க்காதீர்கள்
நான் இலக்கிய வாதி அல்ல
இனையத்தில் எனை தேடாதீர்கள்
நான் இனைய வாதியும் அல்ல
எதுகை மோனை, இயைபு கேட்காதீர்கள்
நான் வெண்பா அமைப்பவன் அல்ல
பின் நீ யாரென வினவாதீர்கள்
அல்ல அல்ல எனக் கூறுபவனல்ல
பிறகு நான் யார் ?
தமிழுக்கு உரியவன்.
தமிழின் பால் மிகுந்த அன்புடையவன்.
தமிழ் கற்க வேண்டும் என கோருபவன்.
தமிழ் தமிழ் என தாகம் தனிய கூறுபவன்.
யாம் அல்ல அல்ல எனக் கூறினாலும்
தமிழ் அள்ள அள்ள குறையாத அமுது போன்றது என்று எடுத்துரைப்பவன்.
இங்ஙனம் இவன்- பொன் வேலு
கருத்துகள்
கருத்துரையிடுக