புதுமனை புகுவிழாவினற்கு

புதுமனை புகுவிழாவினற்கு


பல கனவுகள் கண்டிருப்பீர்(கள்)
கோட்டை கட்ட ஆசை
கொண்டிருப்பீர்(கள்),
சிரித்திருப்பீர் ! சிந்தித்திருப்பீர் !
சித்திரம் பார்த்திருப்பீர்,
நமக்கு என முடிவு செய்திருப்பீர்(கள்).
சித்திரக்கோட்டை எழுப்பி உள்ளீர்,
அட்டாலிகை வாங்கி உள்ளீர்(கள்).
வாழ்த்துச் சொல்லும் நேரமிது,
புதுமனை புகுவிழாவினற்கு !
ஒரு வரியில் சொல்ல வேண்டுமாயின்,
வாழ்க பல்லாண்டு,
16 செல்வங்களும் பெற்று “.
ஒருவரி எனக் கூறி இருவரி
ஆனதன் பொருள் :
இருவரி ஒரு பொருள் ஆன
யா(ழ் +இ)னி ஆனதால்
அமைந்தது இவ்வரிகள்.
தாய்மாமாக்கள் கொடுப்பது
பொருட்சீர்
யாம் அனுப்புவது
எழுத்துச் சீர் !
சொற்ச் சீர் ! சமச்சீர் !


நற்றிணைப் பழகு !


கருத்துகள்