உரசல்

காற்றின் மொழி உரசலோ
உரசிப்போதலில் தானே சத்தம் எழும்
அச்சத்தம் தானே காற்றின் சத்தம்
எனக் கூற வாய்ப்பு உள்ளது.
பல விவாதங்கள் அரங்கேறியிருக்கலாம்,
' இதுவும் விவாதமே, அவற்றுள் ஒன்றே ',
ஏற்பதும், தவிர்ப்பதும், விவாதிப்பதும் உமது கையில் விடுத்துச் செல்கிறேன்.
உரசல் பற்றி என்ன இவனுக்கு ஆராய்ச்சி என அரசல் புரசலாக நிறைய கேள்விகள்
வேள்வியாய் பாய்ந்தது - என்மீது எனக்கே.
இருப்பினும் இங்கே
உரசல்
காற்றோடு காற்று உரச
உரசலுக்கே உன்டான சத்தம் எழுகிறது.
உரசல் காற்றில் மட்டுமா சத்தம் எழுப்புகிறது.
மண் மண்ணோடு உரச
மலை உருவாகிறது.
மேகம் மேகத்தோடு உரச
இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
கால் பூமி மீது உரச
காளை சீறிப் பாய்கிறது‌.
காகிதம் காகிதத்தோடு உரச
உரசல் இரைச்சல் ஏற்க்கிறது.
பிரபஞ்சமே சில உரசலினால்
என்போர் உண்டு, யான் அறியேன்.
ஓடும் அருவி, பூமித்தாய் கொடுக்கும்
இன்பச் சத்தம், ஆறு மகிழ்ச்சி சத்தம்.
இதயம் இதயத்தோடு உரச
எழும் காதல் மனதின் சத்தம்.
எழுதுகோல் அட்டையில் உரசும்
எழுத்துச் சத்தம்.
உரசல் -
பகையின் பலத்த யுத்தச் சத்தம்.
இப்படி அரசலும் புரசலுமாக
உரசல் உரசிச் செல்கிறது.
உரசல் சில விரிசல் ஏற்படுத்திய வரலாறும் உண்டு.
கரிசலின்றி கத்திகள் உரசலின்
கதைகளும் கண்டதுண்டு.
இவ்வாறு உரசல் விளைகிறது
வினைபுரிகிறது.
இன்று இவ்வுரசல்
உரசியும் உரசாமலும் செல்லலாம்,
நாளை வின் மண்ணை உரசாமல் இருக்கலாம்,
என் எழுத்து ஒரு வடிவம் பெற்று
உங்களை உரசும்
அன்று கண் என்னைத் தேடும்
கை உரசக்கூடும்.

கருத்துகள்