ஒரு மலைக்கு இன்னொரு மலை
உயர்வு கூடலாம்
குறையலாம்,
தாழ்வு காணலாம்.
ஆனால் தமிழுக்கும் இன்னபிறக்கும்
தமிழருக்கும்
ஒரே அளவு தான்
‘தமிழ் என்றும் உயர்…
அதுவே தமிழரின் உயிர்…‘
நாக்கு அற்றாலும்
தமிழன் தமிழன் தானே
எதையும் ஏற்பதிலும்
ஏர்பிடிப்பதிலும்
தமிழனுக்கு நிகர்
தமிழன் தானே
தாகம் எடுப்பவனுக்கு
தண்ணீர் கொடுப்பதிலும்
தன்னை அழிப்பனவற்றுக்கு
தாக்கம் கொடுப்பதிலும்
தமிழன் தமிழனே
‘யார் சூழ்ந்தாலும்
அரசன் ஆனாலும்’
தமிழன் தமிழனே.
அமுதுக்கு தமிழ் கொடு
இனிக்கட்டும் இனி.
கருத்துகள்
கருத்துரையிடுக