அய்யாவுக்கு சமர்ப்பணம்

மாலை 6 மணி இருக்கும்
திடீர் என்று என் கட்டுமரம்
ஆட்டம் கண்டது.
நான் பதறினேன்
என்ன ஆனது எனக்கு,
என் படகுக்கு,
தெரியவில்லை.
ஒரு வெப்ப சலனம் காற்று
என் மீது அடித்துச் செல்கிறது.
அனைத்து உடுப்புகளும் செயலற்ற
நிலையில் இருக்கிறத் தோற்றம்.
ஆனால் இயக்கம் கொடுத்துத்தாலும்
என்னுள் மறையவில்லை,
அந்த பின்பம்.
ஒரு வேலை அதுவாக இருக்குமோ,
இல்லை அப்படி இருக்காது
ஒரு வேலை இதுவாக இருக்குமோ,
இல்லை வாய்ப்பே இல்லை.
அதோ எல்லைத் தெரிய ஆரம்பித்து விட்டது.
செல் படகேச் செல்,
என்ன எனக்குள் இருக்கும் அமைதி
ஊர் முழுக்கத் தெரிகின்றது.
இருக்காது,
இருக்கவே இருக்காது.
ஏதேதோ யோசனை,
என்னை நானே சமாதானம் செய்தாலும்
என் மனம் செய்யவில்லை.
கரை சேர்ந்தேன்,
படகைக் கட்டினேன்,
வீடு சேர்ந்தேன்,
எதற்கு பயந்தேனோ,
எது நடக்கக்கூடாது
என்று எண்ணினேனோ,
அது நடந்துவிட்டது.
படகு கவிழ்ந்துவிட்டது.
அழுதேன், புழம்பினேன்
இடம் பெயர்ந்தேன்
இருப்பினும்
எண்ணம் மாறாது
காற்று ஓயாது.
என்ன செய்வேன் !
மாலைச் சூரியன்
மங்கியதே !
அது இதன் பொருட்டா !
கடலும் மயான அமைதி கொண்டதே
அது இதன் பொருட்டா !
ஒரே இருட்டா ஆக்கிவிட்டீரே
அய்யா.
என்ன அய்யா
எங்கள விட்டுட்டு போவீறோ
நடக்காது,
எங்க மனசுல உயர்ந்து நிக்கிறது நீங்க
எப்பவும் உள்ள இருப்பீங்க
நீங்க நீங்கல,
இருக்கீங்க,
ஆனா ஒன்னு இயற்கையை பார்த்து கேட்கனும்னு தோன்றுவதுண்டு,
ஏய் இயற்கையே ?
எல்லாம் கொடுத்த
இயற்கையா வளர்த்த
அப்பறம் ஏன் எங்க
அய்யா உசுர எடுத்த ?
நல்லவுக வாழவிடமாட்டியே,
எங்க அய்யாவ கொடு -
எங்களுக்கு.
நீ கொடுக்க மாட்ட,
அதான் எடுத்துட்டு போய்டியே.
நல்லா பார்த்துக்க எங்க அய்யாவ,
என் தெய்வத்த !
அங்க தமிழ் வளர்க்க !
தமிழ் வெல்லும்.

கருத்துகள்