இனி என்னை நான் பார்ப்பேனோ !
உன் முன்னே நான் தோற்பேனோ !
தீராத எண்ணக்(எண்ணம்) கடலில் வாழ்வேனோ !
நீர் அற்ற காடாவேனோ !
அடிப் பெண்னே இனி என்னை நான் பார்ப்பேனோ !
தீ குச்சி என்னை
உரசித்தான் எரித்தாயே... கேள்விக்குறியானவனை ?
ஆச்சர்யமாக்கிவிட்டாயே !
கூ கூ என குயிலின் சத்தம்
கேட்கத்தான் இனி உன் பக்கம்
வந்து செல்லும் என் மனப்பக்கம்...
தீராத எண்ணம் எல்லாம் கோடிட்டுச் சென்றவளே....
அடியே அமராவதி !
என் காதலி
நீ பாரடி
உன் முன்னே உயிர்ப்பேனடி
யார் அழுதலும் கண் நீயடி
நீர்க் குடித்தாலும் தாகம் தீரல
நீ பிடித்ததால் ஏனோ தாகம் எடுக்கல
தீக்குச்சியும் தீர்ந்து போனதே
காளிப் பெட்டியும் கம்பன் ஆனதே....
கால் பதித்த இடத்தில் எங்குமே
நீ விதைத்த கால் தடமே
பூக்கள் ஆகுமே....
யார் அழுதாலும் மூச்சு வாங்குதே,
உன் கண் பார்த்து நானும் சோர்வதேன்.
நாலடி சுவரில் இருந்த நாளிகள்,
நாட்கணக்கில் உலகம் சுற்றுதே....
பார்த்திருடுவேனோ இனி என்னை நாணுமே !
தோற்றிடுவேனோ இனி உண் முன்வே
காற்றடித்தாலும் காதல் பறவைகள்
காகிதம் போல மேல பறக்குதே...
கொசு கடித்தாலும் கொசுறும் நினைவுகள்,
பிசிரு அடிக்காமல் மேலே ஒட்டுதே...
ஆயிரம் மதங்கள் இருந்த போதிலும்
எந்த மதத்திலும் சேர மருக்குதே...
எண்ணம் எல்லாம் வண்ணம் ஆகுதே உன் காதலில் வாழவே மாறுதே !
உன் முன்னே நான் பார்ப்பேனோ - இனி என்னை...
நான் தோற்ப்பேனோ...
நீர்க்காடு ஆவேனோ
அடிப் பெண்னே !
இனி என்னை நான் பார்ப்பேனோ.....
கருத்துகள்
கருத்துரையிடுக