என்னை நிறைய வேள்விகள் சூழ்ந்துள்ளது…
ஏன் எழுதுகிறாய் ?
யார் நீ எழுத ?
எதற்கு எழுதுகிறாய் ?
காதல் கவிதைகள் எழுதுகிறாயே…
ஒரு வேலை யாரையும் காதலிக்கிறாயோ ?
இருக்கிறது – அனைத்துக்கும் பதில் இருக்கிறது…
முதலில் முதல் கேள்விக்கு – என்னால்
முடிகிறது…எழுதுகிறேன்…
என்ன ஆனவம் போல் தோன்றுகிறது ?
என்பார்கள்…
ஆம் கலையின் மேல் கொண்ட பற்றினால் வந்தது…
சிறிது காலத்தில் சீர் ஆகும்…
இரண்டாவதாக இரண்டாம் கேள்விக்கு- தமிழ்
தமிழன்…
நிறைய பேசுகிறோம்…
எழுத ஆள் இல்லையோ என்ற அச்சம்
அச்சு பதித்தார் போல் மனதில்…. மூன்றாம் கேள்விக்கும் இரண்டிலே கிடைத்திருக்கும் என சுருக்குகிறேன்
சொல்லவந்ததை..
நான்காம் கேள்விக்கு பல எதிர் பார்ப்புகள் உள்ளன !
ஆம் இருக்கிறது….
எனக்குள்ளும் ஒரு காதல் கதை.
அவள் இயைபு உங்களை ஈர்க்களாம்.
அவள் வடிவம் கை அசைவில் வார்க்கலாம்.
அவள் பெயர்….
எளிதில் கூற முடியாதது.
அவள் இனியவள்.
அவள் கொண்ட இலக்கணம் என்னை இயற்றச் செய்தது, அவள் பால் அன்பை.
அவள் யார் தொட்டும், தொடர்புள்ள
தொல்பொருள் கண்ட தொல்காப்பியம்.
அவள் பெயர் ஆர்கலி.
ஆங்கிலம் கற்றவள் அல்ல,
இது ஆங்கிலப் பெயரும் அல்ல,
ஆனால் ஆங்கிலேயர் கண்டு வியந்தவள்.
வியப்புக்குறியவள் !
மிகவும் வியப்பானவள் !
புனைந்து கூறினால் புணரி.
நினைந்து கூறினால் அணரி
என் அழகி ! என் அழலி !
மன்னுலகத்தில் மாண்பு மிக்க
மனிதி.
அவளுக்கு இந்த உலகம்
இட்ட பெயர் தமிழ்.
என் நெஞ்சில் குடியிருக்கும்
என் அன்புக்காதலி தமிழ்.
மூச்சுள்ள வரை நேசிப்போம்…..
கருத்துகள்
கருத்துரையிடுக