தேடும் வழித்தடம் காற்றில் படர்ந்திடும் நேரம்!
எது எல்லை என காண வாடா தோழா...
காற்றில் நீ பறந்திடும் நேரம்
கடிகாரம் உன் முன் ஓடும்!
நாட்கள் இல்லை நீளம்!
வாழ்வதே இங்கு வீரம்...
வாழ்கை நிறையும் நேரம்!
நண்பர்களே இருத்தல் வேண்டும்...
சோகம் எங்கு போகும்!
அஃது பின்னாலிருக்கும் மோகம்...
கனவற்ற வாழ்வும் - எங்கும்
செயலற்று போக நேரும்...
காயம் இல்லா உனதும்!
தீயில் எறிந்து மாறும்...
நீரில் கரைந்து போகும்...
உடல் அற்று நீங்கும்
திரு. மிகு. உயிர்.
கருத்துகள்
கருத்துரையிடுக