பா

தோஷ்த் டா நாங்க தோஷ்த் டா
ரெம்ப தோஷ்த்டா,
காசு பணம் வச்சிறிக்கோம்
அதனால நாங்க தோஸ்த் டா,
மாமன் மச்சான் எல்லாம்
இங்க போரு டா,
காசு பணம் வச்சு
இனி ஏத்துவோம் கேருடா
கேருடா! ரெம்ப கேருடா!
எங்களுக்கு வேண்டாம் மோருடா!
தறோம், தறோம், தறோம்
உசுற கொடையா தறோம்.
வரோம், வரோம், வரோம்
காசு கொடுத்தா தொணைக்கு வரோம்.
ஒருத்தன் இருந்தானா
அவன் ஒழுக்கமா இருந்தான்னா ?
அவன, விலைக்கு வாங்கிடுவோம் !
காசு வேணாம்னா?
உசுற கொடையா கேட்டிடுவோம்.
இப்ப நாங்க யாரு ?
கொஞ்சம் யோசிச்சு பாரு !
எங்க காசப்பாரு,
இப்ப யோசிச்சு பாரு!
“டேய் ரெம்ப யோசிக்காத இந்தா காசப்புடி
எங்களோட சேர்ந்து அடி
குடிடா
இவங்க சாகுறதும் இல்லாம கூட ஆல் சேர்க்குறாய்ங்க பாரு
வெண்ணெய் வெட்டிக”
நாங்க சேர்ந்தாக்கா,
வம்பு பண்ணாக்கா,
எவணா இருந்தாலும்,
அவனுக்கு அவனா(எமனாக) நின்னுடுவோம்!

தோஷ்த் டா நாங்க தோஷ்த் டா
ரெம்ப தோஷ்த்டா,
காசு பணம் வச்சிறிக்கோம்
அதனால நாங்க தோஸ்த் டா,
மாமன் மச்சான் எல்லாம்
இங்க போரு டா,
காசு பணம் வச்சு
இனி ஏத்துவோம் கேருடா
கேருடா! ரெம்ப கேருடா!
எங்களுக்கு வேண்டாம் மோருடா!
தறோம், தறோம், தறோம்
உசுற கொடையா தறோம்.
வரோம், வரோம், வரோம்
காசு கொடுத்தா தொணைக்கு வரோம்.

கோழிக்குஞ்சா நீ இருந்தாக்கா !
உனக்கு சோறு போட்டு நான் வளத்திடுவேன்.
கொஞ்சம் வளர்ந்து நீயும்
கேள்வி கேட்டாக்கா ,
உன் கழுத்த வெட்டி நான் அருத்துறுவேன்.
என்னை மெரைடா…இப்ப மொரைடா…
நான் பண மலை டா…டேய்…
வைரம் போல மனசிருந்தா !
பணத்தை நீயும் ஜெயிச்சிடலாம்.
அந்த வைரமாக நீ இருந்த,
பணத்தை வெட்டி குமிச்சிடலாம்.
கட்டி! கட்டி! தங்க கட்டி!
ஒரு பெட்டி! பெட்டி!
உன் வேலை கெட்டி!
தோஷ்த் டா நாங்க தோஷ்த் டா
ரெம்ப தோஷ்த்டா.
காசு பணம் வச்சிறிக்கோம்
அதனால நாங்க தோஸ்த் டா.
மாமன் மச்சான் எல்லாம்
இங்க போரு டா.
காசு பணம் வச்சு
இனி ஏத்துவோம் கேருடா,
கேருடா, கேருடா,…

கருத்துகள்