இங்க ஒரு நிமிசம் வந்து உட்காருங்க மா
இங்க பாருங்கமா உடல் ரீதியா குத்தம் சொல்றது தப்பு...
அம்மா! இன்னைக்கு இப்டி இருக்கான்னு நீங்க சொல்றிங்க
நல்லா தெரிஞ்சிக்கோங்க உடல் எடை குறைவா இருக்கவன உடல் எடைய அதிகப்படுத்தவும் முடியும் அதே எடைய குறைக்கவும் முடியும்...
முடி வெட்டல்லாம்!!!!
என்ன மா நீங்க இதப்போயி குறையா சொல்றீங்க...
அம்மா அவன் கிராமத்தான் இங்க நகரத்துல மாதிரி வித விதமான கடையெல்லாம் அங்க இருக்காது...
முடி வெட்ட ஒரு குடுசை தான் இருக்கும், வயசானாலும் உழைக்கிற ஒரு கிழவன் இருப்பான்... அந்த மனிசன் முடிய வெட்டிவிடுறதே பெரிய விசயம்! கண்ணு சரியா தெரியாம இருக்கும், கத்திபடும். சிலர் முடிய வெட்டிட்டு வீட்டுக்குள்ளே போகமாட்டான், வீட்டுக்கு பின்னாடி குளிப்பான், இப்பிடி நிறைய இருக்கு
எல்லாருக்கும் உடம்பு இருக்கு எல்லாரும் ஒரே மாதிரி இருந்துரப்போரது இல்லை...
அதனால இந்த விசயத்த எல்லாம் ஒதுக்கீட்டு அவன்/அவள் சொன்னான் (ள்) இவன்/இவள் சொன்னான் (ள்)...
இல்லாம வாழப்பாருங்க...
சிரிக்கிறாங்க யா!!!!
அம்மா சிரிக்கிறவன் சிரிச்சிட்டே தான் இருப்பான் அவன்/அவள் இடத்தை கொஞ்சம் உள்ள போய் பார்த்தா அவங்க பொழப்பே அங்க சிரிப்பா தான் இருக்கும்
கருப்பு!!!
அடுத்து என்ன நிறமா ?
அட என்ன மா நீ திரும்ப திரும்ப ஏதாவது நொட்டை சொல்லிட்டே இருக்க தெரிஞ்சி தான திருமணம் பண்ண ?
அம்மா நம்ம நாட்டுல பெத்தவங்க வேர்வை சிந்தி சூரிய ஒளியில உழைச்சாங்கலான்னு காட்டுறதுக்குகான சான்று மா...அது அவங்க அப்பா அம்மா வெளியில இந்த வெயில்ல வேலை செஞ்ச பொழப்புக்கு கிடைச்ச பரிசு
நீங்க அவங்கல எப்படி பார்த்துகனுன்றதுக்கான சான்று.... எப்பேறு பட்ட வீட்டுல இருக்கிங்கன்னு தெரிஞ்சிககோங்க...அப்பறம் அது கருப்பு நிறம் இல்ல அடர் நிறம்...
வீட்டுக்கு வண்ணம் பூசுற கடைக்கு போய் பாருங்க அங்க ஒரு புத்தகம் கொடுப்பான் ஒரே நிறம் தான் ஆனா Dark, Light னு இருக்கும்...He is not black ,just darker than you... நிறம் மனசுக்கு தெரியாது...
அம்மா உங்க வக்கீலா நான் சொல்லனும் அவன் நல்ல பையன், நான் Back History விசாரிச்சு சொல்றேன், so don't ignore him with chilly reasons... வேற ஏதும் தொந்தரவு செய்யதா சொல்லுங்க நான் பேசுறேன்... இதெல்லாம் நீங்க ஏன் நண்பனோட மகள்றதுனால சொல்றேன்...மித்தபடி
Good bye
Now get out...
கருத்துகள்
கருத்துரையிடுக