ஊருக்கு கொடுப்பாரே,
உள்ளதெல்லாம் கொடுப்பாரே,
உழைத்து கொடுப்பாரே,
கைகலெல்லாம் காய்ப்பு கட்ட,
உள்ளதெல்லாம் உழைப்பாரே
ஊருக்கு கொடுப்பாரே.
வெயிலிய ரசிச்சுத்தான்,
வெட்ட வெளியில் இருப்பாரே.
கொட்டும் வெயிலிய ரசிச்சுத்தான்
வெளியில கெடப்பாரே.
போகிற போக்கில் அவ கொடுத்த
கொட்டு, வியர்த்து கொட்ட.
அதிலையும் உழைப்பாரே
அகிலமும் இருப்பாரே.
நேரத்துக்கு உணவிருந்தும்
உண்ணாம உழைப்பாரே,
நேரங்கெட்ட நேரத்திலும்
ஊருக்கு உழைப்பாரே,
உண்ணாம கொடுப்பாரே.
உங்களைத்தான், உழைப்பாரே !
தினம் தினம் உழைப்பாரே !
உங்களைத்தான்.
வாழ்த்துகள் இன்று (உழைப்பாளர் தினம்).
மலையபுரம் சிங்காரவேலர்,
அளித்தாரே உழைப்பாளர் தினம்
தேசிய விடுமுறை அளித்தாரே,
வேலர்…
மறப்பாரே ! மறவாரே !
தெரிந்து கொள்வோம்
மே ஒன்று 1923
அன்றைய மதராசு மாகாணத்தில்
இயற்றபட்டதே உழைப்பாளர் தினம்.
இவர் பொது உடைமை (Communism) கட்சியின் தலைவராக இருந்த போதே
இயற்றினாரே,
இன்றைய அன்றைய உழைப்பாளர் தினம்.
கருத்துகள்
கருத்துரையிடுக